search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியன் வங்கி"

    சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை நடக்கிறது. #basketball

    சென்னை:

    ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 15-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை (27-ந்தேதி) முதல் மே 5-ந்தேதி வரை நடக்கிறது. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி திடல் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்கிறது.

    ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் வங்கி, வருமானவரி, ஐ.சி.எப்., தமிழ்நாடு சிறப்பு போலீஸ், ஆயுதப்படை அரைஸ் ஸ்டீல் உள்பட 67 அணிகள், பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் அரைஸ் ஸ்டீல், ஜேப்பியார் இன்ஸ்டிடிட், ரைசிங் ஸ்டார் இந்துஸ்தான் பல்கலைக்கழகம் உள்பட 20 அணிகள் என மொத்தம் 87 அணிகள் பங்கேற்கின்றன.

    அரைஸ் ஸ்டீல் மற்றும் சத்யம் சினிமாஸ் ஆதரவுடன் நடக்கும் இப்போட்டியின் மொத்த பரிசுதொகை ரூ.2 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடத்துக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    நாக்அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டி நடக்கிறது. மேற்கண்ட தகவலை ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் செயலாளர் என்.சம்பத் தெரிவித்தார். #basketball

    வாராக்கடன் அதிகரித்துள்ளதால் என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #IndianBank
    சென்னை:

    ஏழை மாணவர்கள் என்ஜீனியரிங் படிப்பதற்கு மத்திய அரசு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் படித்து ஒரு ஆண்டு வரை கடனை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. வட்டியை மட்டும் செலுத்தி வந்தால் போதும்.

    வேலை கிடைத்ததும் தவணை முறையில் செலுத்த வேண்டும். ஆனால் ஏராளமான மாணவர்கள் படிப்பு முடிந்தும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் கடனை திருப்பி செலுத்துவதில்லை.

    தேசிய வங்கியான இந்தியன் வங்கியில் ஏராளமான கல்விக்கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் கோடிக்கணக்கில் வராக்கடனாக உள்ளது.

    இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கு கடன் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    மருத்துவம், உயர்படிப்புகள், மேல்நாட்டு படிப்புகளுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    வராக்கடனை வசூலிக்க அதற்காக அங்கீகரிக்கப்பட்ட குழுக்களுக்கு அனுமதி வழங்குவது பற்றி பரிசீலித்து வருகின்றனர். #IndianBank
    இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் நடத்தும் 18 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராய நகரில் இன்று தொடங்குகிறது.
    இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் முதலாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. ‘இந்தியன் வங்கி டிராபி’க்கான இந்தப்போட்டி இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 20-ந்தேதி வரை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடக்கிறது.

    இந்தியன் வங்கி, வருமானவரி, சுங்க இலாகா, சுங்க இலாகா, சத்யபாமா, ஆல்ஸ்டார்ஸ் உள்பட 18 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன. ‘லீக்’ மற்றும் ‘நாக்அவுட்’ முறையில் போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சமாகும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.

    இன்று மாலை 6 மணிக்கு இந்தப்போட்டியை இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு கமிட்டி தலைவரும், பொது மேலாளருமான எம். நாகராஜன் தொடங்கி வைக்கிறார். 20-ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

    மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கி விளை யாட்டு செயலாளர் ஆர்.சீனி வாசன் தெரிவித்துள்ளார்.
    இந்தியன் வங்கிக்கு கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.1,259 கோடியாகும் என்று வங்கி தலைவர் கிஷோர் கரத் சென்னையில் கூறினார்.
    சென்னை:

    நடப்பாண்டு நிறைவுற்ற காலாண்டிற்கான, இந்தியன் வங்கியின் முடிவுகளுக்கும் மற்றும் நிறைவுற்ற ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கு வங்கியின் இயக்குனர் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுகுறித்து வங்கி தலைவர் கிஷோர் கரத், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கி 2017-18-ம் ஆண்டு வளர்ச்சியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இயக்கலாபம் 25 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.5 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதில் ரூ.1,258.99 கோடி நிகர லாபமாகும்.

    வியாபார சிறப்பம்சங்களில் நிதி நிலை அளவு 15.80 சதவீதமாக வளர்ச்சி அடைந்ததன் மூலம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 176 கோடியாக உள்ளது. உலகளவில் கடன்கள் 23.14 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

    வாரா கடன் வசூல் 65.98 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    முன்னுரிமை கடன்கள் ரூ.63 ஆயிரத்து 36 கோடி அளிக்கப்பட்டுள்ளது. நலிந்த பிரிவினருக்கான கடன்கள் ரூ.16 ஆயிரத்து 213 கோடியாகும். ‘பிரதான் மந்திரி முத்ரதா யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்து 37 கோடியே 46 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3.52 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

    சராசரியாக கிளைக்கு 70 வாடிக்கையாளர்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 80 வாடிக்கையாளர்கள் வீதம் சேர்க்கப்பட்டு உள்ளனர். உள்நாட்டில் 2 ஆயிரத்து 820 கிளைகள் உள்ளன. 3 ஆயிரத்து 399 தானியங்கி பணம் பட்டுவாடா மற்றும் பணம் செலுத்தும் ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. வெளிநாடுகளில் 3 கிளைகள் இயங்கி வருகின்றன.

    வங்கியின் செயல்பாட்டை பாராட்டி சிறந்த செயல் திறன் விருது, சிறந்த வங்கி விருது, ஊழல் விழிப்புணர்வு தொடக்க முயற்சி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

    வங்கியின் இயக்குனர் குழுமம், கடந்த மார்ச் 31-ந்தேதியோடு நிறைவடைந்த ஆண்டுக்கான ஈவுத்தொகை சென்ற ஆண்டை போல 60 சதவீதம் அறிவித்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி உயர் அதிகாரிகள் ஏ.எஸ்.ராஜீவ், எம்.கே.பட்டாச்சாரியா மற்றும் பொதுமேலாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 
    ×